7 Sep

ஹிக்ஸ் போஸான் – கடவுள் துகளா அல்லது கடவுள் சபித்த துகளா?

கேள்வி: சத்குரு, ஹிக்ஸ் போஸான் என்று ஒரு புதிய அணுத் துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் கடவுள் இருப்பது நிரூபிக்கப்படுமா? அறிவியல் மூலம் அது விளக்கப்படுமா?

சத்குரு: கடவுள் துகள் (god particle) என்று அதற்கு பெயர் வைத்தது நல்லதாய் போயிற்று. ஏனென்றால் யாரோ ஒருவர் அதற்கு கடவுள் சபித்த துகள் (god damn particle) என்று பெயரிட வேண்டும் என்று நினைத்தார்கள்.

உலகம் முழுவதிலும், பௌதிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கூட, இப்பொழுது அணுத்துகள் பௌதிகம் (particle physics) பற்றி பேசுவதே மிகப் பெரிய சாதனைதான். தற்சமயம் போஸானால் தொழில்நுட்ப ரீதியாக உபயோகம் இல்லாவிட்டாலும் அதனை அறிந்து கொள்வதற்காக மட்டுமே பத்து பில்லியன் டாலர் செலவழிக்கப் போகிறார்கள்.

அறிவியல் ரீதியாக இதன் விளக்கம் என்ன? யோகாவில் படைப்பனைத்தையும் ஸ்தூலம், சூட்சுமம், சூனியம், சிவம் என்று பகுத்துள்ளார்கள். ஸ்தூலம் என்றால் பொருள்தன்மையில் இருப்பது. நீங்கள் பார்ப்பவை, கேட்பவை மற்றும் ஐம்புலன்களால் உணரக்கூடிய அனைத்தும் ஸ்தூலமாகக் கருதப்படுகிறது. அவற்றை உங்கள் அறிவுத்திறனால் புரிந்துகொண்டு கிரகித்துக்கொள்ள முடியும். ஒரு பொருளின் அடிப்படைக் கட்டுமானப்பொருள் அணு. தேவையான அணுக்கள் சேர்ந்தால் நம் கண்ணுக்கு அது புலப்படுகிறது.

சூட்சுமம் என்பது நம் கண்ணுக்கும் மற்ற புலங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கும், ஆனாலும் அதுகூட பொருள்தன்மை கொண்டதுதான். சூட்சும நிலைக்கு வந்துவிட்டால், அப்பொருளை உங்கள் புத்தியால் ஆராய்ந்து அறிய முடியாது. அதற்கு அசாதாரணமான அறிவுத்திறன் அதாவது, விசேஷ ஞானம் தேவைப்படும்.

இந்த விசேஷ ஞானம்தான் விஞ்ஞானம் எனப்படும். ஐம்புலங்களால் கூட உணர முடியாதவற்றை உங்களால் உணர முடிந்தால் அதுவே விஞ்ஞானம். ஹிக்ஸ் போஸானை யாருமே பார்த்த்தும் இல்லை, பார்க்கவும் முடியாது – அதன் கால்தடம் மட்டுமே பார்க்கமுடியும். கால்தடத்தைப் பார்த்து தான் ஹிக்ஸ் போஸான் இருப்பதாக நம்புகிறார்கள். காட்டில் புலியின் கால்தடத்தைப் பார்த்து புலி நடமாட்டம் இருப்பதாக நம்புகிறோம் அல்லவா, அதுபோலத்தான்.

இன்னும் மேற்கொண்டு சென்றால் சூன்யம் ஆகிவிடும். சூன்யம் என்றால் முழு வெறுமை என்று அர்த்தம். சூன்யத்தில் உங்கள் அறிவுத்திறன், ஐம்புலங்கள் எல்லாமே பயனற்று போய்விடும். ஏனென்றால் அங்கே பொருள், உருவம் எதுவும் இல்லை. சூன்யத்திற்கும் அப்பாற்பட்டது சிவம். எது இல்லையோ அதுவே சிவம். அது உருவமாக இல்லை. இதனை உங்கள் தர்க்க மனம் கொண்டு உணரவும் முடியாது.

இன்று நவீன அறிவியல் பிரபஞ்சம் முழுவதையும் தர்க்க மனம் கொண்டு புரிந்து கொள்ளமுடியும் என்று நம்புகிறது. உங்கள் அறிவு வேண்டுமானால் இந்த பிரபஞ்சத்திற்குள் அடங்கலாம்; ஆனால் பிரபஞ்சம் உங்கள் அறிவுக்குள் அடங்கிவிடாது. புலன்களுக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தை தாண்டியவுடனேயே உங்கள் தர்க்க அறிவு பயனற்றுப் போகிறது.

பிரபஞ்சம் பற்றி யோகக் கலாச்சாரத்தில் இப்படியெல்லாம் விவரித்து இருக்கிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒருவரிடம் விளக்கினேன். பிரபஞ்சம் குறித்த விஷயங்கள் யோகக் கலாச்சாரத்தில் கதைகளாக சொல்லப்படுகின்றன. அவற்றை எல்லாம் ஒருவர் தன் அனுபவத்தின் மூலம் நிதர்சனமாய் அறிந்தால் மட்டுமே நம்பவேண்டும். அதுவரை எதையும் அப்படியே நம்பக்கூடாது என்றும் இக்கலாச்சாரத்தில் சொல்வார்கள் என்று சொன்னேன்.

மேலும் என் அனுபவத்தில் இது தான் பிரபஞ்சம் குறித்த நிதர்சனம் என்று என் அனுபவத்தைச் சொன்னேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர்கள், “சத்குரு, நீங்கள் சொன்ன விஷயத்திற்கு, கூடவே கணிதம் மூலம் ஆதாரம் காண்பித்தால், நோபல் பரிசே கிடைத்து விடும்,” என்றார்கள்

எனவே அறிவியல் மூலம் அறிய விரும்பும் விஷயங்களை எனக்குள் உண்மை என்று உணர்ந்திருக்கிறேன். இருந்தாலும் பத்து பில்லியன் டாலர் கருவி செய்துதான் நிரூபிக்க முடியும் என்று சிலர் நினைத்தால் அது அவர்கள் பாடு. இது (தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்) என்ன என்பதின் ஆழத்திற்கு நீங்கள் போகத் தயாராக இருந்தால், உங்களுக்கு அந்த உண்மை நிரூபணமாகிவிடும்.

ஏனென்றால் இதுவும் (தன்னைச் சுட்டிக் காட்டுகிறார்) பிரபஞ்சமும் ஒரே விதமாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இது எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று அறிந்தால் பிரபஞ்சம் உருவாக்கப்பட்டுள்ள விதத்தையும் ஊகித்து அறிய முடியும். விஞ்ஞானமும் இப்பொழுது ஊகம் தானே செய்கிறது.

பிரபஞ்சம் முடிவில்லாதது என்று விஞ்ஞானம் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. முடிவில்லாத ஒன்றில் போய் படைப்பின் மூலத்தை தேடுவது எளிதா? அல்லது உங்களுக்குள்ளேயே தேடுவது எளிதா? காலையில் சாப்பிட்ட இட்லி, தோசை எப்படி சிலமணி நேரங்களில் மனிதனாக மாறியது? படைப்பின் மூலமே உங்களுக்குள் இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. எனவே படைப்பினைப் பற்றி ஏதேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நமக்குள் பார்ப்பது தானே சிறந்த வழியாக இருக்க முடியும்?

விஞ்ஞானம் இன்று பிழைத்திருப்பதன் காரணம், அது வழங்கும் தொழில்நுட்பம்தான். தொழில்நுட்பமாக மாறாமல் இருந்திருந்தால், விஞ்ஞான ஆய்விற்கு யார் இவ்வளவு செலவு செய்யப்போகிறார்கள்? எனவே விஞ்ஞானத்தால் இத்தகைய பயன்கள் உள்ளன. ஆனால் அந்த விஞ்ஞானத்தால் பிரபஞ்சத்தை உங்களுக்கு திறந்து காட்ட முடியாது. ஏனென்றால் அது அறிவின் மூலம் மட்டுமே அறியமுயல்கிறது. உங்கள் அறிவுத்திறன் எதையும் கூறுபோட்டுதான் பார்க்கும்.

அழகிய மலரை கூறுபோட்டு அதன் அங்கங்களை அறிய முடியும் – ஆனால் அதன் அழகை, அதன் முழுமையை, தெய்வீகத்தின் கரங்களைப் பார்க்க முடியாது. நீங்கள் அந்த மலரில் முழு கவனம் செலுத்தினால் அதில் பிரபஞ்சத்தையே காண முடியும்.

இப்பொழுது விஞ்ஞானம் எப்படி ஆகிவிட்டது தெரியுமா? பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் நாம் எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்க்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத அணு, ஏன் அந்த கடவுள் துகள் போஸானைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒருவேளை ‘போஸான் குண்டு’ செய்தால்? உலகமே ஒரு நொடியில் காணாமல் போய்விடும். புரிகிறதா?

இன்று இந்த உலகத்தையே நாசப்படுத்துவது இதே தொழில்நுட்பம் தானே? ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள், நவீன தொழில்நுட்பம் முதலில் இராணுவத்தில் பயன்படுத்தி பல உயிர்களை வாங்கிய பின்பே மற்ற பயன்பாட்டிற்கு வரும். இன்னும் எவ்வளவு உயிர்ச்சேதம் வேண்டும்?

எதைப்பார்த்தாலும் அதை எப்படி உபயோகிப்பது? அதிலிருந்து எனக்கு என்ன பயன்? இப்படித்தான் பார்க்கிறோம். இது தான் நவீன யுகத்தின் போக்காக உள்ளது. எப்போதுமே எனக்கு என்ன பலன் என்று வாழ்வது பெறுமைக்குரிய முறை அல்ல. அப்படி வாழ்ந்தால், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல்தான் உணர்வீர்கள்.

எனவே உங்களை முழுமையாக வழங்குவது எப்படி என்று நீங்கள் அறிய வேண்டும். இதோ இந்த மரத்தைப் பார்த்தால் கூட நாம் எப்படி இந்த மரத்திற்கு நம்மை முழுமையாக அர்பணிக்க முடியும் என்று பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கையை உணர்வீர்கள். இதில் எனக்கு என்ன கிடைக்கும் என்ற மனப்பான்மையால் வாழ்க்கை உங்களை தவிர்த்து போய்விடும்.

இந்த போஸான், இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் பெயர்கொண்டிருக்கிறது தெரியுமா? அவர் ஒரு கணித மேதை. ஐன்ஸ்டைன் சொன்னார், “மேற்கத்திய விஞ்ஞானிகள், இந்திய கணிதவியல் வல்லுனர்களின் உதவி இல்லாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.” கணிதத்தின் அடிப்படையே கிழக்கு நாடுகள்தான். ஆனால் நாம் நம் கலாச்சாரத்தில் இயற்கைக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டோம். இங்கே இயற்கையை இயற்கை அன்னை என்றுதான் குறிப்பிடுகிறோம்.

அன்னையிடம் இருந்து என்ன வேண்டுமோ அது மட்டும்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவளை கற்பழிக்கக்கூடாது. விஞ்ஞானத்தை ஒரு கருவியாக, தேடுதலாக பயன்படுத்துவதே சிறந்ததாகும். இல்லையேல் அதுவே நமக்கு வீழ்ச்சியாகி எல்லாமே ‘கடவுள் சபித்தது’ ஆகிவிடும்.

     முந்தைய பதிவு
ஆசிரியர் கையில்தான் இருக்கிறது Sadhguru
அடுத்த பதிவு     
Untitled-1 காஞ்ச இட்லி இரண்டு… ஆறிப்போன காபி ஒண்ணு!
மேலும் படிக்க:
002
ஊழல் ஒழிய - தேவை மாற்றம்
kanna, krishna, peacock feather, blue, happiness, beautiful
கண்ணா உன் நீலமயிலிறகின் ரகசியம் என்ன?
Sadhguru-Tamil-001
ஆண்-பெண் ஈர்ப்பு, சரியா? தவறா?
Sadhguru-001
மறுமலர்ச்சியின் துவக்கம்...
  • http://www.facebook.com/saravanan.atg Saravanan Sathappan

    i read this below comments of face book.. its not my own comment.. just i read on face book..

    கடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன?

    இன்று உலகம் தேடிக்கொண்டிருக்கும், ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அரிய உண்மையை
    நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
    திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.

    “அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
    அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
    அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
    அணுவின் அணுவினை அணுகலுமாமே”
    -ஆசான் திருமூலர்-

    ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன?!

    என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவைச் சொன்ன திருமூலர் சிவனின் உருவத்தை சொல்லாமலா இருந்திருப்பார்??

    அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம்
    உண்டாகிறது அல்லவா! இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின்
    வார்த்தைகள்:

    கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
    பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
    அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
    விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
    -ஆசான் திருமூலர்-

    இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும், கலக்காமலும்
    இருப்பவன், கண்ணனுக்குத் தெரியாதவன், பரந்த சடையுடையவன்,
    பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைப்பவர்கெல்லாம் கிடைக்காதவன்,
    அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே என்கின்றார் ஆசான் திருமூலர்.

    இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பார்ப்போம்…!

    பொதுவாகச் சிவபெருமானை நாம் சடாமுடியன், சடையான் என்று கூறுவோம். அதே
    போல், அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார். இப்பொழுது உங்கள்
    கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சடையுடன் நினைத்து கொள்ளுங்கள். நாம்
    பேச்சு வழக்கில் பரட்டைத்தலை என்று சொல்லுவோம் அல்லவா; அதைபோன்று, அனால்
    சற்றுப் பெரிய அளவில்! .

    பின்பு அந்த உருவம் பொன்னிறத்தில் உள்ளது
    போல் நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம்
    வழக்கமாகக் காணும் சிவபெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன்
    காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த உருவத்தை கண்ணுக்குப்
    புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள். சராசரியாக ஒரு அணு அளவிற்கு..!

    இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன்
    பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று..?! இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும்
    நாம் தங்க நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான்
    ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல
    நூற்றாண்டுகளுக்கு முன்னரே.

    தொடரும் என் ஆராய்ச்சி…

    நன்றி:
    கி. கோகுல கிருட்டிணன்.
    ——————————————

    Summarised in English for the benefit of English readers:

    What is the Higgs size and structure :

    “Thirumoolar” who lived century’s(Approx 2-6th AD) ago had written
    “Thirumanthiram” in which he wrote about human life and how to achieve
    his life ambition and secret of this world in 3041 versus. As iam a
    reader of it i have found something unusual in it , and here iam sharing
    it

    மேவிய சிவன் வடிவது சொல்லிடில்
    கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
    மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
    ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
    -திருமூலர்

    In the above line said in Tamil is translated here, The Lord Shivan
    (PARAMANU) also called as Atom’s atom, or a sub Atomic particle , to
    explain his size , he consider a human hair which should be divided into
    100 and then again dividing a single particle with 1000 and then
    divinding resulting single particle into 4000 results in the size of
    Lord Shivan (PARAMANU)or Atom’s Atom.. now lets go in simple
    calculation…..

    An Human Hair which is about 30-80 Micron and now for this case considering it as 50 Micron

    converting 50 Micron in mm

    50 Micron = 0.05mm
    now the human hair = 0.05 mm

    now as per his saying just divide this with 100 as a first step

    0.05 / 100 = 0.0005 mm

    now considering a single particle (i.e.,) 0.0005 mm , and dividing it with 1000 results in second step of it

    0.0005 / 1000 = 0.0000005 mm

    now again considering a resulting single part (i.e.,) 0.0000005 mm ,
    divinding it with 4000 as per his saying results in the size of Shivan
    (PARAMANU- the master atom) or a Atom’s atom .

    0.0000005 mm / 4000 = 0.000000000125 mm

    Now as per his saying , Lord Shivan or PARAMANU is about
    0.000000000125mm in size does it is nearly equalent to higgs Particle ??

    As Extending my research , Thirumoolar who said about the size of Lord
    Shivan (Anupiran) as considered as Atom’s Atom. nearly about the size of
    Higgs Boson particle which is around 10^-17 m , and now Thirumoolar
    would have also explained about the structure of Shivan (Anupiran). as
    in my search i found this exclusive lines from the “Thirumanthiram”

    கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
    பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
    அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
    விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
    -திருமூலர்

    The above tamil statement mean that , the one who is dissolved in
    everything in this world and seem as if he is not there anywhere and
    even not visible to common eyes , who Looks in golden colour with
    shaggedness of hair, he will not be visible until unthen some one in
    deep search of him, who will attract everyone like a glittering White
    moon.

    This is his Translated form and here lord shivan who is
    also called a Sadamudiyan, sadaiyan(Shaggedness of hair) and even he
    mentioned that shaggedness of hair, and now what we do is just imagine a
    person in our eyes with shaggedness of hair, and we will colour him up
    with golden yellow , and now we will shrink him up nearly to an atomic
    level now imagine how he look like ok, now start browsing in internet
    about the images of Higgs Boson particle . everywhere you see is a
    Golden flame which look like shagged hair around it , if it is the
    structure of higgs boson in the internet, Does Thirumoolar saw him
    century’s Ago ????

    சீவன் என சிவன் என்ன வேறில்லை
    சீவனார் சிவனாரை அறிகிலர்
    சீவனார் சிவனாரை அறிந்தபின்
    சீவனார் சிவனாயிட்டு இருப்பரே
    -ஆசான் திருமூலர்-

    மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
    கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
    மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
    ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
    -ஆசான் திருமூலர்-

    இவர் இங்கு குறிப்பிட்டுருப்பது சிவனுடைய (சீவன் என சிவன் என்ன வேறில்லை -
    திருமூலர்) வடிவைச் சொல்ல வேண்டுமாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து
    அதை நூறாகக் கூறிட்டு, பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாகப் பிரித்து,
    பின் அதில் ஒன்றை நான்காயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று
    கூறி இருக்கிறார்.

    இப்பொழுது நாம் விஞஞானம் சொல்வதைப் பார்ப்போம். ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு..

    0 .000000212 mm – ஹைட்ரோஜென்

    சரி இப்பொழுது நாம் திருமூலர் கூற்றுப்படி கணக்கிட்டு பார்போம். ஒரு
    மனிதனின் முடியானது 40 -80 மைக்ரோன் (micron) ஆக உள்ளது. பசுவின் முடியானது
    சிறிது அடர்தியாகவே இருக்கும். எனவே, நாம் 100 மைக்ரோன் என்றே
    வைத்துகொள்வோம்

    மயிரின் சுற்றளவு = 100 மைக்ரோன்
    (size of an hair = 100 micron )

    100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
    (100 micron = 0.1 millimeter)

    இப்பொழுது திருமூலர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

    0.1/100 = 0.001 மில்லிமீட்டர் (MM)
    அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

    0.001/1000 = 0.000001 மில்லிமீட்டர் (MM)

    இப்பொழுது நமக்குக் கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தால் வகுத்தால் சிவனின் உருவத்தின் அளவைக் காணலாம் என்கிறார் திருமூலர்

    0.000001/4000 = 0.00000000025 மில்லிமீட்டர் (MM)

    ஆகவே, இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிப்பிடுவது சராசரியாக 0 .00000000025 மில்லிமீட்டர் (MM).

    இப்பொழுது இந்தக் கடவுள் எனக் கருதப்படும் அளவானது, நாம் அறிவியல்
    ஆய்வாளர்களால் அளக்கப்பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு
    சிறியதாக உள்ளது. சரி அதைவிடச் சிறியதாக என்ன இருக்கமுடியும்
    என்கிறிர்களா… அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள்
    தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும்
    அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாகச்
    செயல் படவில்லை. அணுவுக்குள் அணு(பரமாணு) ஒன்று உள்ளது. அது தான் காட்ஸ்
    பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும்
    அறியப்படவில்லை . அறியப்பட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்.

    • http://www.facebook.com/people/Ramya-Suresh/100002289891471 Ramya Suresh

      good effort.higgs boson is a golden light, beautiful.

  • http://www.facebook.com/balasri.m Bala Sri

    நலம்

  • http://tinyurl.com/8gsy88k Prophet

    Force the Search Engines to Create Your High PR Links for You !
    http://tinyurl.com/8gsy88k

  • http://www.facebook.com/people/Ramya-Suresh/100002289891471 Ramya Suresh

    sadhguru,so many researches are going on in this world which is a threat to our existence.can you do something about it.The koodangulam nuclear power plant is going to be opened here in the south.We don’t know whether to trust the govenment’s promises or the environmentalists.Can you do something about this.We’re not going to benefit from the power plant anyway……….so can isha do something about it.

  • http://www.facebook.com/people/Simmakutty-Manoharan-Balaji/100002901753213 Simmakutty Manoharan Balaji

    Ippadi oru vilakkam sathguru mattum thaan solla mudiyum. But last paravil “KARPAZHIKKAKUDATHU” endra vaarthai mattum konjam maathi ezhuthi irrukkalam.Its my humble request.