shivanga

அருள்மழையில் நனைய பெண்களுக்கான ஒரு விரதம்!, Arulmazhaiyil nanaiya pengalukkaana oru viratham

அருள்மழையில் நனைய பெண்களுக்கான ஒரு விரதம்!

ஒவ்வொரு வருடமும் பெண்களுக்காக சத்குருவால் வழங்கப்படும் சிவாங்கா விரதம், உத்தராயணம் துவங்கும் காலமான தைப்பூச தினத்தில், தேவியின் அருளைப் பெறுவதற்கான ஒரு அற்புத வழியாக உள்ளது. பெண்களுக்கான சிவாங்கா விரதம் குறித்தும் இந்த வருடத்தின் விரத காலம் குறித்தும் இங்கே ஒரு கண்ணோட்டம்!

ஆர்த்தரிடிஸிலிருந்து சிவாங்கா வரை..., Arthritisilirunthu shivanga varai

ஆர்த்தரிடிஸிலிருந்து சிவாங்கா வரை…

மதுரை இராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் திரு.சிவபிரகாசம் அவர்கள், ஈஷா யோகா வகுப்பிற்குப் பின் தன்னை நெடு நாட்களாக வாட்டி வதைத்த ஆர்த்தரிடிஸிலிருந்து எப்படி விடுப்பட்டார் என்பதையும், அதன் பின் சிவாங்கா விரதமிருந்து வெள்ளியங்கிரி மலை ஏறிய அதிசயத்தையும் இங்கே மெய்சிலிர்க்க நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்…

தீர்த்த யாத்திரை செல்வதால் என்ன கிடைக்கும்?, Theertha yaathirai selvathaal enna kidaikkum?

தீர்த்த யாத்திரை செல்வதால் என்ன கிடைக்கும்?

கோயிலுக்கு செல்வது கூட சுற்றுலாவாக மாறிவிட்ட இன்றைய சூழலில், நம் கலாச்சாரத்தில் தீர்த்த யாத்திரை என்பது எத்தனை முக்கியமானதாக இருந்து வந்துள்ளது என்பது மறக்கப்பட்டு வருகிறது. தீர்த்த யாத்திரை யாரெல்லாம் செல்ல வேண்டும்? ஏன் செல்ல வேண்டும்? அதனால் நமக்கு என்ன கிடைக்கும்? இத்தனைக் கேள்விகளுக்கும் சத்குருவின் வாயிலாக விடை கிடைக்கிறது இந்த வீடியோவில்.

பக்தி – கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை, Bhakthi kattuppadugalilirunthu viduthalai

பக்தி – கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை

‘பக்தி’ என்றாலே முகம் நிறைய விபூதி அணிந்துகொண்டு, எதையுமே செய்யாமல் கோயிலில் கிடப்பவர்கள் என நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள். ஆனால், உண்மையான பக்தியென்பது உள்ளத்தில் இருப்பதுதானே?! பெண்கள் சிவாங்கா சாதனா சத்சங்கத்தில், சத்குரு பேசிய இந்த உரை, பக்தியின் உயர்வையும் அதனால் விளையும் நன்மையும் விளக்குவதாய் உள்ளது. வீடியோ இங்கே உங்களுக்காக…

என்னைக் கரைத்த பிச்சைப் பாத்திரம் !, Ennaik karaitha pichai paathiram

என்னைக் கரைத்த பிச்சைப் பாத்திரம் !

புத்தர் முதல் நம் ஊர் சித்தர்கள் வரை பிச்சை எடுத்தே தங்கள் ஜீவனைக் காத்து வந்துள்ளனர். பிறைநிலவைச் சூடி உடுக்கை ஒலியில் நடனமாடும் சிவனும் கூட பிச்சைப் பாத்திரமே ஏந்தியுள்ளார். ஏன் இவர்கள் பிச்சை எடுக்க வேண்டும்? அது ஒரு ஆன்மீக செயல்முறையா? இதோ இங்கே, சிவாங்கா சாதனாவில் தான் பெற்ற அனுபவத்தை இவர் விவரிக்கும்போது நமக்கு நன்கு புரிகிறது!

ஈஷாவில் நடந்தவை…, Ishavil nadanthavai

ஈஷாவில் நடந்தவை…

இந்த வாரம் ஈஷாவில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் செயல்நிலையிலும், மக்களைச் சென்றடைவதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. மஹாசிவராத்திரி, கலையின் கைவண்ணம், சம்யமா, இன்னர் வே என களைகட்டிய இந்த வாரம் ஈஷாவில் நடந்தவைகளைப் பற்றி ஒரு பார்வை இங்கே…

உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!, Ungal oor vazhiye varum shivangakkal

உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!

42 நாட்கள் விரதமிருந்து வெள்ளியங்கிரிக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள சிவாங்கா சாதகர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஈஷா மையம் நோக்கி நடைபயணத்தை துவங்கியுள்ளனர். அவர்களின் நடைபயண விவரங்களையும், பயணத்தில் கண்ட காட்சிகளையும் இங்கே பதிகிறோம். சிவாங்கா பாத யாத்திரைக் குழுவில் நீங்களும் இணைந்துகொள்ள காத்திருக்கிறது ஒரு வாய்ப்பு. தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்!

பக்தி பற்றி சத்குரு, Bakthi patri sadhguru

பக்தி பற்றி சத்குரு !

6000க்கும் மேற்பட்ட பெண்கள் லிங்கபைரவிக்கு மாலையணிந்து 21 நாட்கள் சிவாங்கா விரமிருந்து தைபூசத்தன்று தேவியை தரிசித்து அவளது அருள் வெள்ளத்தில் திளைத்தனர். சேலம் மேட்டூரிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்ட பெண் சிவாங்காக்கள் பற்றியும் பக்தியுணர்வு பற்றியும் அன்றைய தினத்தில் சத்குரு பேசிய உரை மற்றும் விரதம் மேற்கொண்ட சிவாங்காக்களின் அனுபவங்களை இந்த வீடியோவில் காணலாம்!